www.garudabazaar.com

BiggBossUltimate: தள்ளி ஸ்டார்ட் ஆகும்னு பாத்தா.. தானா ஸ்டார்ட் ஆகுதே.. தொடக்கமே பிரமாதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai 01,பிப்ரவரி,2022:- அண்மையில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

BiggBoss Ultimate Sharik Vanitha Balaji heated argument

Bigg Boss OTT

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த 5 சீசன்களை தொடர்ந்து 5வது சீசனின் ஃபினாலே நிகழ்ச்சியின் போது ராஜூ வெற்றி பெற்றதாக முதலில் கமல் அறிவித்தார். அதன் பிறகு, 5வது சீசன் நிகழ்ச்சிக்கு பின் முதல் சீசன் ஓடிடி பிக்பாஸ் குறித்த அறிவிப்பையும் அந்த மேடையில் வைத்து நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

Bigg Boss Ultimate

இதில் 24 மணி நேரமும் போட்டியாளர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதெலாம் சென்சார் கட் இல்லாமல் காண்பிக்கப்பட்டு வருகிறது. அதனை பார்வையாளர்கள் எந்த நேரத்திலும் காணும் வகையில் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வருவதுடன், ஒரு நாள் முழுவதும் ஓடும் நிகழ்ச்சியின் சிறப்பு ஒரு மணி நேரத் தொகுப்பு தினமும் ஹாட் ஸ்டாரில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

போட்டியாளர்கள்

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டுக்கெ  என தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளனர். ஆம், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான முந்தைய 5 சீசனிலும் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இந்த பிக்பாஸ் அல்டிமேட் வீட்டின் போட்டியாளர்களாக, வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹாசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Also Read: “நமக்குள்ள சண்டையே வந்தது இல்ல”.. இறந்த தோழியின் பிறந்த நாளில் Bigg Boss யாஷிகா ஆனந்த் உருக்கம்!

போட்டியாளர்களிடையே காரசார பேச்சு

இது தொடர்பான ப்ரோமோக்களும் அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. அதில் ஒரு ப்ரோமோவில் நடிகை வனிதா டீ பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அவரது சூட்கேசில் வைக்கிறார். பிறகு சக போட்டியாளர்களிடம் காபி கேட்டு அடம் பிடிப்பது போல் அடம் பிடிக்கிறார். பிறகு பாலா மற்றும் அனிதா இருவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு வனிதாவால் வீட்டில் மற்றவர்களுக்கு பிரச்சனை வருகிறது என்று பேசுவதுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்கு நீங்க ஓனர் இல்ல

ஏற்கனவே பிக் பாஸ் 3வது சீசனில் வனிதா முதலில் வெளியேற்றப்பட்டு, பின்னர் வைல்டுகார்டு மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வனிதா மீண்டும் காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அவருக்கும் ஷாரிக் ஹாசனுக்கும் வாதம் வலுக்கிறது. அவருடனான வாதத்தில், வனிதா ஏய்.. போடா என்று சொல்லிவிட்டு போக, பாலாவோ, “இந்த வீட்டுக்கு நீங்க ஓனர் இல்ல.. இது பிக்பாஸ் வீடு” என சொல்லுகிறார். 

இப்பவே பத்திக்க ஆரம்பிச்சிடுச்சா?

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதலே பரபரப்பாக ஆரம்பித்திருக்கிறது. சண்டை தலைதூக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும் என நினைத்தால், ஓடிடி என்பதால் என்னவோ, மிகவும் விரைவாக வாதங்கள் தொடங்கிவிட்டன. இப்படியே போனால் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் குரூப்பிசம், கைகலப்பு வரையில் போகும் போலயே என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

Also Read: 'இளவரசே.. நா விரல்..'.. தாலி கட்ட சொல்லிக் கொடுத்த மணப்பெண்.. கப்புனு புடிச்சுட்டாரே மாப்ள!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Ultimate Sharik Vanitha Balaji heated argument

People looking for online information on Bigg Boss OTT, Bigg Boss Ultimae today Promo, Bigg Boss Ultimate, Vanitha Vijayakumar will find this news story useful.