Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

டைட்டானிக் கப்பலில் விஜய் சேதுபதி.. "ரெண்டு" ரோஸ் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து தனுஷ் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு 'நானும் ரெளடிதான்' படத்தை இயக்கினார். காமெடி கலந்த காதல் கதையில் நயன்தாரா காதுகேட்காத பெண்ணாக நடித்து பாரட்டுக்களைக் குவித்தார். அதேபோன்று விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.

teaser of Kaathuvaakula Rendu Kaadha will be released tomorrow

நானும் ரெளடி தான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தக் கூட்டணியுடன் சமந்தாவும் இணைந்துள்ளார்.  இப்படத்தினை லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். கண்மணி கதாப்பாத்திரத்தில் நயன்தாராவும், காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார்.

teaser of Kaathuvaakula Rendu Kaadha will be released tomorrow

இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமசை முன்னிட்டு டிசம்பர் 23 அல்லது டிசம்பர் 23 அன்று வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பகிர்ந்துள்ளார்.  டைட்டானிக் பட காட்சியை போன்று விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகிய மூவரும் நிற்பது போன்ற பட போஸ்டர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

விஜய் நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது. அவர் நடித்து முடித்துள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

teaser of Kaathuvaakula Rendu Kaadha will be released tomorrow

தொடர்புடைய இணைப்புகள்

teaser of Kaathuvaakula Rendu Kaadha will be released tomorrow

People looking for online information on Kaathuvaakula Rendu Kaadhal, Nayanthara, Samantha, Teaser, Vignesh Shivan, Vijay Sethupathy will find this news story useful.