www.garudabazaar.com

Video: ஒன்னா சேர்ந்து ஊர் சுத்திய நடிகைகள்.. நீதான் வாங்கி தரணும்.. சமந்தாவை வம்பிழுத்த வரலட்சுமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் வெளியான "போடா போடி" படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே, தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ், மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடித்த படங்களிலேயே 'தாரை தப்பட்டை' , 'சர்கார்' 'சண்டக்கோழி 2' 'விக்ரம் வேதா ' ஆகிய படங்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படங்களாகும்.

Varalakshmi Sarathkumar Samantha photo goes viral on Instagram

சமந்தா - வரலட்சுமி சரத்குமார்

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தின் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதில், நடிகை சமந்தா மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். இதனால் சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Varalakshmi Sarathkumar Samantha photo goes viral on Instagram

ஹோட்டலில் லூட்டி

ஹைதராபாத்தில் 3 உள்ள பிரபல உணவகத்திற்கு சென்ற சமந்தா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது தோழி மூவரும் சாப்பிட சென்றனர். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "இதோபார் உன்னோட போட்டோவை போஸ்ட் போட்டிருக்கேன். நீதான் சாப்பாடு வாங்கி கொடுக்கணும்" என்று சமந்தாவிடம் வரலட்சுமி கேட்டுள்ளார். இதையடுத்து, சமந்தா, வரலட்சுமி அவரது தோழியுடன் உணவகத்தில் சென்று சாப்பிட்டனர். 

யசோதா படப்பிடிப்பு

நடிகை சமந்தா, தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே சுவிட்சர்லாந்து சென்ற அவர் அங்கு பனிச்சறுக்கு விளையாட்டைப் பயின்றார். இதுதொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்தியா திரும்பிய சமந்தா 'யசோதா' பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

Varalakshmi Sarathkumar Samantha photo goes viral on Instagram

முதல் முறையாக 2 நடிகைகள்

இதில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்குகின்றனர். மணி சர்மா இசையமைக்கிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIDEO: ஒன்னா சேர்ந்து ஊர் சுத்திய நடிகைகள்.. நீதான் வாங்கி தரணும்.. சமந்தாவை வம்பிழுத்த வரலட்சுமி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Varalakshmi Sarathkumar Samantha photo goes viral on Instagram

People looking for online information on Hyderabad, Instagram, Movie Shooting, Samantha, Varalaxmi Sarathkumar, Viral photo, Yasoda will find this news story useful.