www.garudabazaar.com

வீட்ல விசேஷம் தான்!! விரைவில் அம்மாவாக போகும் ரசிகர்களின் முன்னணி favourite சீரியல் நடிகைகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகை நீலிமா ராணி, தான் கர்ப்பம் தரித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

tamil serial actresses who are soon to be mothers

இவருக்கு ஏற்கனவே ஒரு சுட்டியான பெண் குழந்தை உள்ள நிலையில், தன் மகள் மற்றும் கணவருடனான புகைப்படத்தை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை நீலிமா ராணி, தங்களுக்கு வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமது திருமண நாளில் இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ள நீலிமா ராணி, “வரும் ஜனவரி மாதம், இப்போது 3 பேராக இருக்கும் நாங்கள் 4 பேராகிறோம்!” என இது தொடர்பாக தாம் வெளியிட்டுள்ள அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாக எனும் வில்லி கேரக்டரில் நடித்து மிரட்டும் நடிகை ஃபரீனா கர்ப்பமாக இருக்கிறார்.

இவரது கர்ப்ப கால ஃபோட்டோஷூட்கள் எல்லாமே அண்மையில் இணையதளத்தில் வைரலாகி வந்தன. தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் விரைவில் தாயாகவிருக்கிறார்.

சின்னத்திரையில் இன்னொரு சீரியல் முக்கியமான வரவேற்பைப் பெற்று வருகிறது என்றால், அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் ராதிகா எனும் முக்கிய கேரக்டரில் நடித்துவந்த நடன நடிகை ஜெனிஃபர் கர்ப்பாமாக இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். இவர் அந்த சீரியலில் இருந்து பின்னர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பகல் நிலவு சீரியலில் நடித்துவந்த சமீரா ஷெரீஃப் 9 மாத கால கர்ப்பிணியாக இருப்பதாக அறிவித்ததுடன் இவரும் ஃபோட்டோஷூட்களை எடுத்து பதிவிட்டிருந்தார்.

இவர்களுடன் டாடி கேடி மூலமாக கலக்கிவரும் சௌமியா கர்ப்பிணியாக இருக்கிறார். விரைவில் அம்மாவாக போகும் இவருக்கு தற்போதுதான் வளைகாப்பு நிகழ்வு நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வீட்ல விசேஷம் தான்!! விரைவில் அம்மாவாக போகும் ரசிகர்களின் முன்னணி FAVOURITE சீரியல் நடிகைகள்! வீடியோ

tamil serial actresses who are soon to be mothers

People looking for online information on Baakyalakshmi Jeniffer, Baakyalakshmi Radhika, Bharathi Kannamma Serial today episode, Fareena, Neelima, Neelima rani, Pagal Nilavu, Venba fareena, VijayTelevision will find this news story useful.