கொரோனா லாக்டவுன் பிரச்சனைக்கு முன்னால் சில படங்கள் ஷூட்டிங் முடிக்கப்பட்டு வெளிவர இருந்தன. அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படம் முதல் தரணி ராஜேந்திரன் என்பவரின் ஞானச்செறுக்கு என்ற படம் வரை விதிவிலக்கல்ல. மேலும் அடுத்தடுத்த லாக்டவுனால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் சில படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் அபிலாஷ் ஜி தேவன் என்பவர் தாய்நிலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘2008-ம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை போர் உச்சத்தில் இருந்த வேளையில் தன் உற்றாரையும் உறவினர்களையும் இழந்து இறுதியில் உயிரோடு மிஞ்சிய தன் ஒரே ஒரு மகளுடன் தமிழகம் வருகிறார் கதைநாயகன் சேதுராமன்.
வந்த இடத்தில் ஒரு பாழடைந்த ரோட்டோர பயணிகள் நிழற்குடையில் தன் வாழ்க்கையை நகர்த்துகிறார். அதன் அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களும் பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சரவணனும் அவர்களுக்கு புதிய உறவினர்களாக மாற, தன் மகளுக்கு மிக அழகான அற்புதமான ஒரு வாழ்க்கையை உருவாக்க நினைக்கிறார்
அங்குள்ள நல்லவர்களாகிய ஒவ்வொரு மனிதரும் அவர்களுக்கு உதவ ஒரு சொர்க்கம் போன்ற வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். தன் மகள் இழந்த அனைத்தையும் அவளுக்காக சேர்க்க ஆரம்பிக்கிறார்... அதன் பின் என்ன ஆகிறது அவரது கனவு நினைவாகியதா என்பதை ஆழமாகப் பதிவு செய்யும் படமிது. இது ஒரு அப்பா மகள் பாச பிணைப்பின் கதை.
நாம் எந்த இடத்தில் வாழ்கிறோம் என்பதல்ல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையை அழகு படுத்தும் என்று தன் வாழ்க்கையால் உணர்த்தும் கதாபாத்திரம் சேதுராமன் உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார்.... அதே போல நாம் தெருவில் பார்க்கும் ஒவ்வொருத்தரும் அவர்களின் வாழ்வில் எப்படி எல்லாம் சந்தோஷத்தை கொண்டு வருகிறார்கள் என்பது இந்த திரைப்படத்தில் சொல்ல முயன்றுக்கிறோம்’ என்றார்
சேதுராமனாக டாக்டர் அமர் ராமசந்திரனும்,அவரது மகள் தமிழினியாக நேஹா அமரும், சரவணனாக மறைந்த நடிகர் பாலாசிங்கும் நடித்துள்ளனர்.தவிர நிமிஷா நம்பியார், தீபக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசெப்பச்சன் இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு, பிரஷாந்த் பிரணவம், கலை கைலாஷ் மற்றும் எடிட்டிங் டீஜோ
நேனி என்டேர்டைன்மெண்ட் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் தற்போது டொரொண்டோ திரைப்பட விழா உட்பட பல சர்வதேச விழாக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
லாக்டவுன் முடிந்தபின் விரைவில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kashmir World Film Festival Postponed Likely New Dates
- Tamil Nadu CM Edappadi K Palanisamy Funds Rs. 75 Lakh For Chennai International Film Festival
- Nivin Pauly's Moothon Movie At Spain International Film Festival
- Two Tamil Films Selected At International Film Festival Of India
- AR Rahman’s 99 Songs To Be Screened At Busan International Film Festival On October 9
- Parthiban's Otha Serupu Nominated In Singapore South Asian International Film Festival
- R.Parthiepan’s Oththa Seruppu Gets Selected For Singapore South Asian International Film Festival
- GV Prakash’s Sarvam Thaala Mayam Is Selected For Shanghai International Film Festival
- "Sarvam Thaalamayam" Directed By Rajiv Menon Selected Into International Panorama Of 22nd Shanghai International Film Festival 2019.
- Thiagarajan Kumararaja's Super Deluxe Will Be Screened At The 23rd International Film Festival In South Korea
- Rajiv Menon Reveals Untold Stories Of Cannes Film Festival And Tamil Cinema
- Vasanth's Sivaranajaniyum Sila Pengalum Movie Got Best Film Awad In Atlanta Film Festival