இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ரோலில் டாப்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படத்தில் டாப்சி நடிக்கப்போவதாக உலவிய தகவலை இன்று அவரே உறுதி செய்தார்.

Taapsee plays lead in Indian Cricketer Mithali Raj's biopic.

மிதாலி ராஜ் தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட டாப்சி மிதாலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார்.

மிதாலியின் பயணத்தை திரையில் சித்தரிப்பது தனக்கு பெருமிதமாக இருப்பதாக தெரிவித்த அவர், மிதாலிக்கு பரிசாக அவர் ரோலில் நடித்த திரைப்படத்தை தரப்போவதாக தெரிவித்தார்.

இத்துடன் டாப்சி தான் மிதாலி ராஜ்ஜிடம் ரோஜா மலர் ஒன்றை கொடுக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

`சபாஷ் மித்து’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ராகுல் தோலகியா இயக்குகிறார். இப்படத்தை வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.