தமிழில் ‘மாயா’ படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள ‘கேம் ஓவர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனிஷ் குருவில்லா, வினோதினி வைதிநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாயா’, ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படங்களுக்கு இசையமைத்த ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் கவனித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியது. அதைத் தொடர்ந்து தற்போது ‘கேம் ஓவர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை நடிகர் ராணா டகுபதியும், இந்தி டிரைலரை நடிகை டாப்ஸியும் வெளியிட்டுள்ளனர். தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் நடிகை டாப்ஸி தமிழ் சினிமாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கேம் ஓவர் திரைப்படம் வரும் ஜூன்.14ம் தேதி வெளியாகவுள்ளது.
டாப்ஸியின் திக் திக் நிமிடங்கள்..: திகிலூட்டும் கேம் ஓவர் டிரைலர் இதோ..! வீடியோ