Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

VIDEO: "டேய்.. சும்மா இர்ரா!".. எஸ்.ஜே.சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை.. மிரட்டலான Sneak Peak!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. 

SJ Suryah Nenjam Marappathillai Selvaraghavan Sneak Peak!

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் படம் ரிலீஸாக வேண்டிய இப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் தற்போது வரும் மார்ச் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

படத்தில் கொடூர கொலைகாரனாகவும் கதாநாயகனாகவும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இப்படத்தின் ஸ்னீக்பீக் தற்போது வெளியாகியுள்ளது. அதில் எஸ்.ஜே.சூர்யா, அருகில் இருந்தவரிடம், “ஏண்டா அவளை எரிக்காமல் புதைச்சீங்க. அதுவும் இந்த வீட்லயே? இது என்ன தாஜ்மஹாலா?” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு முன்பாக கட்டிலில் படுத்தபடி பயத்தில் அலறிக்கொண்டிருக்கும் ஒருவனிடம்,  எஸ்.ஜே.சூர்யா, “டேய் சும்மா இர்ரா..” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவன் அலறிக்கொண்டே இருந்ததை அடுத்து, அடித்துக் கொன்றுவிடுகிறார். பின்பு, “நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவனாவே இருப்பது.. இவனயாச்சும் புதைக்காம எரிச்சுடுங்க” என தனக்கே உரிய பாடி லாங்வேஜில் சொல்லிவிட்டு செல்கிறார்.

இந்த ஸ்னீக் பீக்கை பார்த்தவர்களோ, “படம் மிரட்டலா இருக்கே.. செம என்டர்டெயின்மென்ட்டா இருக்கும் போலயே!” என தெரிவித்துள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து  யுவன் ஷங்கர் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார் செல்வராகவன்.

மேலும் செல்வராகவன், தமது தம்பி தனுஷை வைத்து, “நானே வருவேன்” என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இது தவிர ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் இயக்கவிருப்பதாக முடிவு செய்திருக்கிறார். இயக்குநராக மட்டுமின்றி தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணி காயிதம் என்கிற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து அறிமுக நடிகராக நடித்தும் வருகிறார்.

ALSO READ: 'சிங்கிள் டேக்ல ஆடுவோம்ல!'.. சுட்டிக் குழந்தைகளின் 'வாத்தி கம்மிங்'.. தரமான சம்பவம்!

SJ Suryah Nenjam Marappathillai Selvaraghavan Sneak Peak!

People looking for online information on Nenjam Marappathillai, Regina Cassandra, Rockfort Entertainment, Selvaraghavan, Sj suryah, Sneak peak, Yuvan Shankar Raja will find this news story useful.