சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்காக மாஸ் காட்ட திரளும் 500 சூரர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 07, 2020 12:38 PM
என்ஜிகே, காப்பான் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் திரைப்படம் ’சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேரில் தயாரித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அதன் டீசர் வெளியாகிறது.
அதையொட்டி இன்று சென்னை, GK Cinemas திரையரங்கில் சூரரைப் போற்று டீசர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் சென்னை மற்றும் திருவள்ளூரைச் சார்ந்த சூர்யா ரசிகர்மன்ற நிர்வாகிகள், நண்பர்கள் உட்பட 500 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
Tags : Suriya, Soorarai Pottru