Official: சூர்யா படத்தில் பிரபல ஹீரோவுடன் இணையும் ஜோதிகா! - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 28, 2019 03:16 PM
ஜோதிகா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் 'ஜாக்பாட்'. கல்யாண் இயக்கிய இந்த படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்திருந்தார். விஷால் சந்திரசேகர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இதனையடுத்து சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன் படி இந்த படத்தை கத்துக்குட்டி பட இயக்குநர் இரா.சரவணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் சசிக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்.வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இந்த படத்தின் பூஜை இன்று (நவம்பர் 28) நடைபெற்றது. இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது. கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது.