கிளைமேக்ஸ் ஃபைட் சீன்ஸ் குறித்து பேசிய சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' பட வில்லன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 17, 2019 10:33 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'தர்பார்'. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சுனில் ஷெட்டி தர்பார் குறித்தும் சூப்பர் ஸ்டார் குறித்தும் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கிளைமேக்ஸில் நாங்கள் மோதும் ஃபைட் சீன் இருக்கிறது. 99 சதவீதம் நானும் சூப்பர் ஸ்டாரும் தான் அந்த ஃபைட் சீன்ஸ் செய்தோம். அதுவும் டூப் இல்லாமல் செய்தோம் என்று தெரிவித்தார். 9 நாட்கள் வரை அந்த ஃபைட் சீனின் படப்பிடிப்பு நடைபெற்றது'' என்றார்.
கிளைமேக்ஸ் ஃபைட் சீன்ஸ் குறித்து பேசிய சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' பட வில்லன் வீடியோ