மும்பையில் வெளியாகும் ‘தர்பார்’ படத்தின் டிரெய்லர் - விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 15, 2019 06:56 PM
ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’தர்பார்’. ரஜினிகாந்தின் 167-வது திரைப்படமான இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து படத்தின் டிரெய்லர் ரஜினியின் பிறந்தநாள் (12.12.2019) அன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் நாளை (16.12.2019) மாலை 6.30 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்நிலையில், தர்பார் படத்தின் ஹிந்தி டிரைலர் மும்பையில் நடைபெரும் விழா ஒன்றில் வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத், சந்தோஷ் சிவன், சுனில் ஷெட்டி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
டிரெய்லர் வெளியாவதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் ’தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#DarbarTrailer from tomorrow pic.twitter.com/qZd0I50ctv
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 15, 2019