சூர்யா பாடல் பாடி அசத்தும் ரெய்னா! - சின்ன தல-க்கு பெரிய பிகிலு போடு..!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 28, 2019 02:11 PM
சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகர் சூர்யா நடித்த படத்தின் பாடல் ஒன்றை பாடி, தமிழில் எழுதி, பேசியுள்ள வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் அணிகளில் வலிமையான அணியாக திகழும் சென்னை அணி தன்னுடைய டீமில் இருக்கும் வீரர்களின் பிறந்தநாளுக்கு மறக்காமல் வாழ்த்தி, அந்த நாளை அவர்களுக்கு இன்னும் ஸ்பெஷல் ஆக்கிவிடும். அந்த வகையில் சென்னை அணியின் சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா (நவ.27) தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி சென்னை அணி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் ஸ்பெஷலாக நடிகர் சூர்யா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான ரொமாண்டிக் பாடலான ‘முன்பே வா..’ பாடலை பாடியுள்ளார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அன்போடு அழைக்கும் ‘சின்ன தல’ என்ற தனது செல்லப்பெயரையும் தமிழில் எழுதியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு பெரிய விசில் அடிங்க..’ எனும் டிரேட்மார்க் டயலாக்கையும் பேசிய வீடியோ மூலம், ரெய்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Seconds. 3 Super Moments.@ImRaina croons #MunbeVaa, inks #ChinnaThala in Thamizh and of course finishes off with #WhistlePodu! #HappyBirthdayRaina 🦁💛 pic.twitter.com/AX5B9DsWyK
— Chennai Super Kings (@ChennaiIPL) November 27, 2019