’சூர்யா, ஸ்பாட்ல என்ன திடீர்ணு திட்ட ஆரம்பிச்சுட்டார்…’ - 'சூரரைப் போற்று' பிரபலத்தில் ஷாக்!
முகப்பு > சினிமா செய்திகள்’காப்பான்’ படத்தில் பிரதமரின் மெய்க்காப்பாளராக நடித்த சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கும் சூரரைப் போற்று படத்தில் ஒரு விமான நிறுவனத்தை துவங்க போராடும் சாமானியனாக நடிக்கிறார். இந்த கதை ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கிய ஜீ.ஆர்.கோப்பிநாத்தின் வாழ்வை தழுவியது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில். விரைவில் இந்த அப்படத்தின் தீம் பாடலான ’மாறா’ வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த படத்தல் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, அர்ஜுனன், மோகன்பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி மற்றும் சிக்கயா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுடன் நடித்த கிருஷ்ண குமார் பல அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக ஒரு தருணத்தை சொன்ன அவர், சூர்யா திடீரென கோபப்பட்டு ’ஷாட் முடிஞ்சதும் அப்படியே வந்து நின்னுடுவிங்களா’ என்று சத்தம் போட்டதாகவும். பின்னர், ’சும்மா கேட்டேன் வா காஃபி குடிக்க போலாம்’ என்று சொல்லி விளையாடியதையும் கூறினார். மேலும் படப்பிடிப்பின் பல பிரம்மிப்பூட்டும் அனுபவங்களை கீழ்க்காணும் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
’சூர்யா, ஸ்பாட்ல என்ன திடீர்ணு திட்ட ஆரம்பிச்சுட்டார்…’ - 'சூரரைப் போற்று' பிரபலத்தில் ஷாக்! வீடியோ