www.garudabazaar.com

Dhanush: "ஹாலிவுட் கதவுகள் தானாக திறக்கும்.. கோலிவுட் நாயகன்".. வாழ்த்து சொன்ன பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ‘மாநாடு’ திரைப்படத்தை தயாரித்து வருபவர் சுரேஷ் காமாட்சி.

Suresh Kamatchi wishes on Dhanush D38 Birthday

இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதனிடையே மிக மிக அவசரம் எனும் ஒரு திரைப்படத்தையும் சுரேஷ் காமாட்சி இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தை பலரும் அண்மையில் பாராட்டினர். இதற்கு காரணம் இந்த திரைப்படத்தில் பெண் போலீசாரின் நெருக்கடிகளை காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

Suresh Kamatchi wishes on Dhanush D38 Birthday

இது குறித்து தமிழக அரசு அண்மையில் ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது. அதன்படி மகளிர் போலீசார் உயர்மட்ட தலைவர்கள், அதிகாரிகள் வரும் போது பாதுகாப்புக்காக சாலைகளில் நிற்க வேண்டியதில்லை என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் தான் ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தை அனைவரும் பாராட்டினர். இந்த அறிவிப்புக்காக முதல்வருக்கு சுரேஷ் காமாட்சி நன்றியும் தெரிவித்திருந்தார்.

Suresh Kamatchi wishes on Dhanush D38 Birthday

இந்நிலையில்தான் நடிகர் தனுஷின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் காமாட்சி, வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்த வாழ்த்து செய்தியில்  “திறமை ப்ளஸ் கடின உழைப்பு இருந்தால் ஹாலிவுட்டின் கதவுகள் கூட தானாகத் திறக்கும் என்பதற்கு உதாரணம் நம் கோலிவுட் நாயகன் தனுஷ். உயர்ந்து பறந்து எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் கொடி பறக்கட்டும்.  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஆடுகளம், அசுரன், கர்ணன் என தொடர்ச்சியாக பேக் டூ பேக் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வருவதுடன், விருதுகளையும் வாங்கிக் குவிக்கிறார். கடைசியாக அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் பெற்றார். 

Suresh Kamatchi wishes on Dhanush D38 Birthday

இந்நிலையில் முன்னதாக தனுஷ், “The Extraordinary Journey Of The Fakir” எனும் ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து தற்போது, அவெஞ்சர்ஸ் புகழ் இயக்குநர்கள் இயக்கத்தில் “The Gray Man” ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். 

ALSO READ: அபராதத்துக்கு தடை..  அரசுக்கு நோட்டீஸ்.. விஜய்-யின் சொகுசு கார் மேல்முறையீட்டு வழக்கு.. நீதிமன்றம் அடுத்த பரபரப்பு உத்தரவு!

Tags : Dhanush

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Kamatchi wishes on Dhanush D38 Birthday

People looking for online information on Dhanush will find this news story useful.