சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான 'பேட்ட' டெலிட்டட் சீன் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கியிருந்தார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

Superstar Rajinikanth's Petta Movie Deleted Scene is out

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சசிக்குமார், நவாஸூதின் சித்திகி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், முனீஷ் காந்த், மாளவிகா மோகனன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு பேட்ட படத்தின் டெலிட்டட் சீன் வீடியோவை வெளியிட்டுள்ளது.