சிங்கம் வருது சீனோட...- 'தர்பார்' பட டிரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 14, 2019 07:05 PM
சூப்பர் ஸ்டார் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில், இயக்குநர் ஷங்கர், அருண் விஜய், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் குறித்து பெருமிதம் தெரிவித்தனர்.

இந்த படத்தில் இருந்து சும்மா கிழி என்ற பாடல் சிங்கிள் ரிலீஸாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நண்பர்களே, டிரெய்லரை காண தயாராகுங்கள், தர்பார் படத்தின் டிரெய்லர் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. என்ஜாய்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
Hello Friends, Get ready for an action packed Trailer!!! Happy to announce that we will be launching the Trailer of DARBAR on 16th, 6:30 PM. Enjoy... @rajinikanth @SunielVShetty @LycaProductions @anirudhofficial @santoshsivan @prateikbabbar #Darbar #DarbarTrailer
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 14, 2019