நடிக்க வந்த இடத்தில் பெருக்கிய காத்ரீனா கைஃப் – வீடியோவை பகிர்ந்த சூப்பர் ஸ்டார் வில்லன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவர்ச்சிக்கு பெயர் போனவர் ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃப். பிரிட்டிஷ் இந்திய நடிகையான இவர் ஆரம்பத்தில் விளம்பரப்படங்களிலும், மாடலிங் துறையிலும் இருந்தார். பின்னர் இந்தி சினிமாவில் வாய்ப்பு பெருக மும்பைக்கு குடிபெயர்ந்த அவர் நடித்த பல படங்கல் வெற்றிபெற்றன.

Super Star villain Akshay kumar posts Katrina Kaif sweeping the set of Sooryavanshi viral swachh bharat

மேலும் இவர் நடனமாடிய ஷீலா கி ஜவானி உள்ளிட்ட பல பாடல்கள் மிகப்பெரும் வெற்றிபெற்றன. இந்நிலையில் இவர் தற்போது அக்‌ஷை குமாருடன் சூர்ய வம்ஷி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ’சென்னை எக்ஸ்ப்ரஸ்’, ’தில் வாலே’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஷூட்டுக்கு பின்னான நேரத்தில் கத்ரீனா கைஃப் செட்டை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு கேப்ஷன் கொடுத்திருந்த அக்‌ஷய் குமார், ‘சூர்யவம்ஷி செட்டில் புதிய ஸ்வச் பாரத் தூதர்’ என்று கலாய்த்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Spotted : The newest #SwachhBharat brand ambassador on the sets of #Sooryavanshi 😬 @katrinakaif #BTS

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

Entertainment sub editor