www.garudabazaar.com

ஜெயிலர் படப்பிடிப்பில் வேட்டி சட்டையில் ரஜினிகாந்த்.. ரசிகருடன் எடுத்த வைரல் போட்டோஸ்! TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Super Star Rajinikanth with Fan Latest Photos

Also Read | "உங்க பயணத்தில் என்னை கைப்பிடிச்சு கூப்புட்டு போறிங்க".. கமல் குறித்து உதயநிதி நெகிழ்ச்சி!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த ஜெயிலர் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.

Super Star Rajinikanth with Fan Latest Photos

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு ரசிகர் சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வேட்டி சட்டையில் காட்சியளிக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தின் ஸ்டைலில் தாடி & மீசை தோற்றமளிக்கிறது. இந்த புகைப்படங்கள் வெளியானதும் ரஜினிகாந்த் & ஜெயிலர் பெயர்கள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

Super Star Rajinikanth with Fan Latest Photos

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Super Star Rajinikanth with Fan Latest Photos

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Also Read | நீண்ட நாட்களுக்கு பிறகு தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் அப்பாஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth with Fan Latest Photos

People looking for online information on Rajinikanth, Rajinikanth with Fan Latest Photos, Super Star Rajinikanth will find this news story useful.