காதலியை கரம்பிடித்த ‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 11, 2019 04:16 PM
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தனது நீண்ட நாள் காதலி திவ்யங்காவை இன்று திருமணம் செய்துக் கொண்டார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆனந்த் ஷங்கர், கடந்த 2014ம் ஆண்டு கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்த ‘அரிமா நம்பி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சீயான் விக்ரம், நயன்தாரா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த ‘இருமுகன்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை குவித்ததுடன், நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
அதையடுத்து, ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் ஹீரோவாக அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா நடிப்பில் அரசியல் கதைக்களத்தில் அமைத்த ‘நோட்டா’ திரைப்படத்தை இயக்கினார்.
இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தனது நீண்ட நாள் காதலியான திவ்யங்கா ஜீவானந்தம் என்பவரை இன்று (ஜூலை.11) திருமணம் செய்துக் கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்ட இவர்களது திருமண நிகழ்ச்சியில் சென்னை ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் நடைபெற்றது. புதுமண தம்பதிகளுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.