www.garudabazaar.com

அட.. சன்னி இப்போ தாவணியில்.. "கிச்சன்ல நான் ரொம்ப பிஸி.."..‌ வைரல் வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதலில் கவர்ச்சி நடிகையாக இருந்து, பின்னர் பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக மாறியவர் சன்னி லியோன்.

Sunny leone latest insta video about cooking parathas

கவர்ச்சிக்கு எந்த அளவுக்கு அவர் பெயர் போயிருந்தாலும், அவருடைய சிறந்த மனதுக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இங்கு உள்ளது.

இந்தியாவில் எந்தவொரு நிகழ்வுக்கு சன்னி லியோன் சென்றாலும், அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

சன்னி லியோன் இப்போ செம பிசி

கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நடிகை சன்னி லியோன், தொடர்ந்து பல மொழிகளில் பல திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்தும் வருகிறார். ஷீரோ, தமிழில் ஓ மை கோஸ்ட், தெலுங்கில் சில படங்கள் என சன்னி லியோன் கைவசம் நிறைய திரைப்படங்கள் உள்ளது.

இதில், சமீபத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் நடிகை பயல் ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவும் சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார். தொடர்ந்து, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், தன்னுடைய திரைப்படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் தொடர்பான அப்டேட்டுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருப்பார்.

எப்பவும் செம ஆக்டிவ்

அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கு நடிகர்களான விஷ்ணு மஞ்சு மற்றும் சிவபாலாஜி ஆகியோருடன் இணைந்து ஜாலியாக கேம் ஆடும் வீடியோவினை வெளியிட்டிருந்தார். அந்த வகையில், தற்போது விஷ்ணு மஞ்சுவுடன் இணைந்து லைவ் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தாவணி உடையில் இருக்கும் சன்னி லியோன், இந்த லைவ் வீடியோவில் விஷ்ணு மஞ்சுவுடன் இணைந்து பரோட்டா உருவாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இருவரும் மாறி மாறி, கலாய்த்த படி இருக்கின்றனர். சமையல் என்னும் சீரியஸான வேலையை சிரித்துக் கொண்டே ஜாலியாகவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

பலரும் சன்னி லியோன் உணவு தயாரிப்பதை விட, தாவணி உடையில் அவர் அழகாக இருப்பதை தான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone latest insta video about cooking parathas

People looking for online information on சன்னி லியோன், Instagram Live, Manchu Vishnu, Sunny Leone, Sunny leone fans will find this news story useful.