www.garudabazaar.com

Sundari Serial : 500வது எபிசோடுல இப்படி ஒரு சர்ப்ரைஸா..? எதிர்பார்ப்பில் சுந்தரி சீரியல் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல முக்கிய சீரியல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்று கிட்டத்தட்ட 500 எபிசோடுகளை நெருங்கி ஒளிபரப்பாகி வருகிறது.

sundari serial 500th episode will be telecasted as single shot

கிராமத்தில் இருந்து கலெக்டராக வேண்டும் என்கிற கனவுடன் வந்த சுந்தரி கார்த்திகை திருமணம் செய்தாலும், கார்த்திக் சுந்தரியை ஏமாற்றிவிட்டு அனுவுடன் வாழ்கிறார். ஒரு கட்டத்தில் இது சுந்தரிக்கு தெரிய வர சுந்தரியின் வாழ்க்கை போராட்டம் தொடர்கிறது.

இதில் அடுத்த கட்டமாக சுந்தரி கலெக்டராக நினைக்கிறார். இதற்கான பயிற்சி அளிக்கும் பயிற்சி அதிகாரியாக கௌசல்யா இந்த சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இனி இந்த சீரியலில் விறுவிறுப்பாக நடக்க போகும் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். கௌசல்யாவின் வருகை சீரியலின் கதைக்கும், திரைக்கதைக்கும் எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ண போகிறது என்பதையும் ரசிகர்கள் காண ஆவலாக உள்ளனர்.

இதனிடையே இந்த சீரியலின் 500வது எபிசோடை முன்னிட்டு சிங்கிள் ஷாட் எபிசோடை கட் இல்லாமல் ஒளிபரப்பவுள்ள செய்திகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. அதன்படி வரும் நவம்பர் 3-ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சிங்கிள் ஷாட் எபிசோடு ஒளிபரப்பாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

sundari serial 500th episode will be telecasted as single shot

People looking for online information on Sun TV Serial, Sundari, Sundari 500 episode, Sundari 500th episode, Sundari serial 500 episode, Tv Serial will find this news story useful.