Reliable Software
www.garudabazaar.com

சன் டிவியில் புதிதாக அறிமுகம் ஆகும் சமையல் நிகழ்ச்சி... தொகுத்து வழங்கப் போகும் டாப் ஹீரோ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விதவிதமான உணவுகள் மற்றும் சமையல் மீது மனிதனுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். சுவைப்பது மட்டுமன்றி எப்படி உணவு வகைகளை தயாரிக்கிறார்கள் என்று பார்ப்பதிலும் பிரியம் காட்டுவது இயல்புதான். எனவே எப்போதும் ஜெயிக்க கூடிய இந்த ஐடியாவை முன்னிலை படுத்தி உலகம் முழுவதும் உள்ள பல சேனல்கள் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். TRP குறையாமல் பல நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தற்போது சமையல் நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளது.ஆம் 45 நாடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த "மாஸ்டர் செஃப்" என்ற நிகழ்ச்சியை தமிழில் சன் டிவி நிறுவனம் தற்போது தயாரிப்பு இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி தமிழில்  மட்டுமல்லாது கன்னடத்திலும் தயாராக இருக்கின்றது.

Sun tv to launch new cooking program சன் டிவியில் புதிதாக சமையல் நிகழ்ச்சி

இதையெல்லாம் விட மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த சமையல் நிகழ்ச்சியை பிரபல நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார் என்று தகவல் பரவி வருகிறது. விஜய் சேதுபதிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அவர் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதை சற்று வித்தியாசமாகவும், ரசிக்கக்கூடிய விதத்திலும் செய்வார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை நாம் அனைவரும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின்  புரோமோவை சன் டிவி தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

சன் டிவியில் புதிதாக அறிமுகம் ஆகும் சமையல் நிகழ்ச்சி... தொகுத்து வழங்கப் போகும் டாப் ஹீரோ? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sun tv to launch new cooking program சன் டிவியில் புதிதாக சமையல் நிகழ்ச்சி

People looking for online information on Master chef, Sun TV will find this news story useful.