பிரபல நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது... மணக் கோலத்தில் வெளியிட்ட போட்டோ..!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை கீதாஞ்சலி. அந்த சீரியலின் ஹீரோவும், இயக்குனருமான திருமுருகனுக்கு காதலியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலிலும் நடித்தார். இரண்டு சீரியல்களும் வெற்றிகரமாக முடிவு பெற்ற நிலையில், ஜீ தமிழில் 'நிறம் மாறாத பூக்கள்' என்ற சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலிலும் மாறி மாறி நடித்தார்.
ஆனால் சில பிரச்சனைகள் எழவே ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தற்பொழுது நிறம் மாறாத பூக்கள் சீரியலும் நல்லபடியாக முடிவு பெற்றுள்ளது. காரைக்குடியை பூர்விகமாக கொண்ட அவர் சென்னையில் தனது தாயுடன் தங்கி நடித்து வந்தார். அடுத்து வாய்ப்புகள் சரியாக இல்லாத நிலையில் தற்போது தனது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் நடிகை கீதாஞ்சலி, கீர்த்தி ராஜ் என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார். இது பெரியோர்களால் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாம். இந்நிலையில் திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் மௌனம் காத்து வந்த நடிகை கீதாஞ்சலி தற்பொழுது தனது கணவருடன் மணக்கோலத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புபுகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.