Video: ஜிங்கிள் பெல் சாங் மூலம் கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுத்த அனிருத்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 25, 2019 10:32 AM
அனிருத் இசையில் சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' பட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அனிருத் விஜய் நடிக்கும் 'தளபதி 64' படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக, சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஜிங்கிள் பெல் பாடலை, பாடகர்கள் அர்ஜூன் சாண்டி மற்றும் சஜித் சத்யாவுடன் இணைந்து பாடியுள்ளார்.
A quick jam to bring in the last Christmas of the wonderful decade that was with #ArjunChandy and @Le_Sajbro 🎅🏻🎅🏻🎅🏻
Video courtesy @vinhariharan 🤛🏻 pic.twitter.com/SLr9mWQeXi
— Anirudh Ravichander (@anirudhofficial) December 24, 2019