செல்வராகவன் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'என்ஜிகே' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத் சிங் , சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'என்ஜிகே' படத்துக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்க விருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த செய்தியில் உண்மையில்லை என தெரியவந்தது.
ஜெயம் ரவி நடிப்பில் கார்த்திக் தங்கவேலு இயக்கிய 'அடங்க மறு' என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜெயம் ரவியின் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.