www.garudabazaar.com

'பத்து தல' படம் மிகப்பெரிய இலாபம்".. அறிக்கை வெளியிட்டு சிம்புவை வாழ்த்திய தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பத்து தல படத்தின் வெற்றியை தொடர்ந்து பட நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Studio Green Statement about Pathu Thala Movie Success Box Office

அந்த அறிக்கையில், "எங்களின் 'பத்து தல திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம். படம் குறித்து பாராட்டி அதை உயர்த்திய விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

'பத்து தல' திரைப்படம் சிலம்பரசனின் கரியரில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல், எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் லாபம் தந்திருக்கக்கூடிய படமாகவும் அமைந்ததுள்ளது.

சிலம்பரசன் (STR) இந்தப் படத்தின் ஒரு முக்கியமாக அங்கமாக இருந்து, அவரது சிறப்பான ஆதரவைக் கொடுத்து உதவியுள்ளார். குறிப்பாக இசை வெளியீட்டு விழா மற்றும் பிற புரோமோஷன்களின் போது கலந்து கொண்டு படத்திற்கு ஒரு பெரிய கவன ஈர்ப்பைக் கொண்டு வந்து படம் பல வழிகளில் வெற்றிபெற உதவியதற்காக அவருக்கு எங்களது நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம்.

ஏ.ஆர். ரஹமானுக்கு எங்களது சிறப்பு நன்றி. ரஹ்மான் சார் தனது பிஸியான அளித்து, பல ஷெட்யூலுக்கு மத்தியில் எங்கள் படத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு வாரங்களாக முதலிடத்தில் இருக்கும் சார்ட்பஸ்டர் பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் அருமையான பின்னணி இசை, இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மற்றும் பிற புரோமோஷன்களில் ஒரு பகுதியாக இருந்தது படத்திற்கு பெரிதும் உதவியது.

திரைப்படத்தின் இந்த மூன்று வருட பயணத்தில் தனது உற்சாகத்தைத் தக்கவைத்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில், தரமான கமர்ஷியல் எண்டர்டெய்னரை கொடுத்த இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். படத்தின் பல்வேறு உரிமைகளை சிறந்த விலையில் விற்க. படத்தின் மீதான அவரது ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இந்தப் படம் சுமுகமாக முடிந்து வெளிவருவதற்கு முதன்மைக் காரணம்.

எல்லா வகையிலும் படத்திற்கு முழு ஆதரவை வழங்கிய அன்பான கௌதம் கார்த்திக் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மற்ற கலைஞர்கள் பிரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன். சந்தோஷ் பிரதாப், டீஜே அருணாச்சலம், அனு சித்தாரா, மது குருசுவாமி, ரெடின் கிங்ஸ்லி. கலிஞர் மனுஷ்யபுத்திரன், சென்றாயன், சௌந்தரராஜா மற்றும் பிறருக்கும் எங்கள் நன்றிகள்.

'நடன சென்சேஷன்' சாயிஷா சைகல் தனது நடனத்தால் மிகப்பெரிய வெற்றியை "ராவடி.." பாடலின் மூலம் பெற்றுத் தந்துள்ளார். கடைசி நேரத்தில் நடனத்தில் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததற்காக அவருக்கும் எங்களது ஸ்பெஷல் நன்றி.."

ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே பாஷா, எடிட்டர் பிரவீன் கேஎல், கலை இயக்குநர் மிலன், ஆடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன். வசனம் எழுதிய ஆர்.எஸ். ராமகிருஷ்ணன், ஆடியோகிராஃபர் எஸ்.சிவக்குமார். சவுண்ட் டிசைனர் கிருஷ்ணன் சுப்ரமணியன், ஆக்ஷன் கோரியோகிராஃபர் சக்தி சரவணன், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் என இத்தனைக் காலம் இந்தப் பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து பொறுமையாக பயணித்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எங்கள் நன்றி.

Studio Green Statement about Pathu Thala Movie Success Box Office

படத்தின் வெளியீட்டை செய்து கொடுத்ததற்க்காக உலகம் முழுவதும் உள்ள எங்கள் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். 1,200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு, 2வது வாரத்திலும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் தொடர்ந்து ஓடுவதையும் உறுதி செய்துள்ளனர். அவர்களின் பெரிய ஆதரவுதான் படத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெறச் செய்துள்ளது.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து 'பத்து தல' திரைப்படத்தை ஆதரித்த மியூசிக் பார்ட்னர் சோனி மியூசிக், டிஜிட்டல்/ஓடிடி பார்ட்னர் அமேசான் பிரைம், சேட்டிலைட் பார்ட்னர் ஜீ தமிழ் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

Studio Green Statement about Pathu Thala Movie Success Box Office

கடைசியாக, 'பத்து தல' படம் முழுமையடைய ஆதரவளித்த எங்கள் பார்ட்னர் பென் இந்தியா லிமிடெட் மற்றும் படத்தின் வியாபாரத்தில் எங்களுக்கு எல்லா வகையிலும் உதவிய மேங்கோ மாஸ் மீடியாவுக்கும் எங்கள் நன்றி. எங்களின் அடுத்த படத்துடன் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்". என அந்த அறிக்கையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Studio Green Statement about Pathu Thala Movie Success Box Office

People looking for online information on Pathu Thala will find this news story useful.