www.garudabazaar.com

"இன்னும் வலி.. பயமா இருக்கு!.. எதிரிக்கு கூட இப்படி வர கூடாது!".. பிரபல சீரியல் நடிகர் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கிட்டத்தட்ட 2 வருடங்களாக தொடர்கிறது. பலருக்கும் பெரும் ரணமான அனுபவத்தை தந்த இந்த கொரோனா பலரையும் விட்டுவைக்கவில்லை.

Still pain stress and panic popular tv actor emotional post

அப்படி கொரோனா ஏற்பட்ட சுவடுகள் இன்னும் வலி மிகுந்த அனுபவமாகவே உள்ளதாக பிரபல விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதன்மைக் கதாபாத்திரங்களுள் ஒருவரான வெங்கட் தமது சமூக வலைப்பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் இது ஒரு மகிழ்வான தினம் அல்ல. ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. ஆனால் இன்னும் அந்த வலி, அழுத்தம், பயம் எதுவும் மறைந்த பாடில்லை. துரோகி & எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது.” என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பதிவில் வெங்கட், “கொரோனா (கோவிட்) இன்னும் இருக்கிறது, அனைவரும் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள். இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தி தருபவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்!” என்று அறிவுரை கூறியுள்ளார். அண்மையில் தான் பாண்டியன்  ஸ்டோர்ஸ் சீரியலும், தமிழும் சரஸ்வதியும் சீரியலும் விஜய் டிவியில் சங்கமமாக ஒளிபரப்பாகின.

தொடர்புடைய இணைப்புகள்

Still pain stress and panic popular tv actor emotional post

People looking for online information on Pandian stores, Pandian Stores Venkat, PandianStores, TVActor, TVSerial will find this news story useful.