www.garudabazaar.com

ரசிகர்கள் அதிர்ச்சி!! திடீரென விலகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘ரோஜா’ சீரியல் நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

pandian stores jeeva venkat quits roja serial பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த சீரியலில் முக்கிய கேரக்டரான லட்சுமி அம்மாள் கதைப்படி இறந்ததை அடுத்து இந்த சீரியல் கேரக்டர்கள் அனைவரும் உருக்கமாக அழுதும் பேசியும் இருந்து வருகின்றனர். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களில் முக்கியமானவர் தான் ஜீவா எனும் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வெங்கட்.

pandian stores jeeva venkat quits roja serial பாண்டியன் ஸ்டோர்ஸ்

நடிகர் வெங்கட் கனா காணும் காலங்கள் முதல் சீரியல் உலகில் பிரபலமாக அறியப்படத் தொடங்கினார். பல்வேறு வகையிலும் மக்களுக்கு பிடித்தமான பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் வெங்கட், தற்போது பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

pandian stores jeeva venkat quits roja serial பாண்டியன் ஸ்டோர்ஸ்

இது தொடர்பாக ஒரு போஸ்டையும் அவர் பதிவிட்டிருக்கிறார். அதன்படி நடிகர் வெங்கட் சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆம், சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் முன்னணி சீரியல்களுள் ஒன்று.

pandian stores jeeva venkat quits roja serial பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த சீரியலில் நாயகனாக அர்ஜுன் எனும் கேரக்டரில் நடித்து வரும் சிப்பு சுரேனுக்கு, தம்பியாக நடிகர் வெங்கட் நடித்திருப்பார். இந்த நிலையில் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக நடிகர் வெங்கட் அறிவித்திருக்கிறார். இது கஷ்டமாக இருந்தாலும் ரோஜா சீரியலில் தொடர்ந்து ரசிகர்கள் காட்டிய அன்புக்கு நன்றி என்றும் அந்த அன்பு எப்போதும் தொடர வேண்டும் என்றும் நடிகர் வெங்கட் கேட்டுக் கொண்டுள்ளார்.

pandian stores jeeva venkat quits roja serial பாண்டியன் ஸ்டோர்ஸ்

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக தொடர்ந்து தன்னை காண முடியும் என்றும் தம் பதிவில் நடிகர் வெங்கட் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: “கடைசி வர உன்ன பாக்க முடியலயேம்மா”.. “கண்ணா”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா - கண்ணன்.. உருக்கமான interview!

தொடர்புடைய இணைப்புகள்

pandian stores jeeva venkat quits roja serial பாண்டியன் ஸ்டோர்ஸ்

People looking for online information on PandianStores, Roja, SunTV, TVSerial, Venkat, VijayTelevision will find this news story useful.