www.garudabazaar.com

என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி .. விஜய்க்கு ரிலேஷன், சர்வைவரில் இருக்கும் நடிகரின் தாயாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

இந்த சீரியலில், மறைந்த பாண்டியனின் மனைவி லட்சுமி எனும் கேரக்டரில் நடிகை ஷீலா நடித்து வந்தார். இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களில், கடைசி ஆளான கண்ணன், ஐஸ்வர்யா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் மற்றவர்கள் அதிருப்தி அடைய, கண்ணன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

இதனைத் தொடர்ந்து கண்ணன், ஐஸ்வர்யாவுடன் தனியே வசித்து வந்தார். இதில் கண்ணனாக, சரவணன் விக்ரம் நடித்து வருகிறார். ஐஸ்வர்யாவாக ஏற்கனவே தீபிகா நடித்து வந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

இப்படி இந்த சீரியலில் பல மாற்றங்களும் அடுத்தடுத்த திருப்பங்கள் என பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்தான் ரசிகர்களுக்கு திடீர் அதிர்ச்சி தரும் விதமாக இந்த சீரியலில் லட்சுமி கேரக்டர் திடீரென உயிரிழப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

கடைசி மகன் கண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றதால் அந்த தூக்கத்தில் லட்சுமி கேரக்டர் இறந்து விடுவதாய் கதையில் காட்டப்பட்டுள்ளது. இந்த இறப்பை அடுத்து அனைவரும் அழுது ஃபீண்ணும் காட்சிகள் தற்போது பார்வையாளர்களிடையே உருக்கமான காட்சிகளாக இருந்து வருகின்றன.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

குறிப்பாக லட்சுமி அம்மாள் இறந்து போனதும் கடைசி மகனான கண்ணன் வருவாரா? மாட்டாரா? என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால் தாயை காண்பதற்கு கடைசி நேரத்தில் கண்ணன் ஓடி வந்த காட்சிகளும் உருக்கமாக இருந்தன. இதனைத் தொடர்ந்து மூத்த மகன் மூர்த்தி லட்சுமி அம்மாவுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய, கண்ணனோ மொட்டை அடித்துக் கொள்கிறார்.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

ஒரு சீரியலுக்காக ஒரு நடிகர் இப்படி மொட்டை அடித்துக் கொள்ளும் அளவுக்கு செல்வதெல்லாம் வேற லெவல் என ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை கொடுத்து வந்தனர். இது குறித்து பேசிய கண்ணன், “இந்த காட்சிகள் அவ்வளவு உணர்வுபூர்வமாகவும் தத்ரூபமாகவும் வந்திருப்பதும், அந்த காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன” என்று குறிப்பிட்டு இருந்தார்.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

இதேபோல் இந்த சீரியலில் லட்சுமி அம்மாவாக நடித்த ஷீலா தற்போது கவனிக்கப்பட்டு வருகிறார். அவர் கேரக்டர் முடிந்ததையடுத்து அவர் இந்த சீரியலில் தற்போது நடிக்கவில்லை. என்றாலும் கூட அவர் பற்றிய பேச்சுகள் ரசிகர்களிடையே இருக்கின்றன.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

இந்த நிலையில்தான் லட்சுமி அம்மா கேரக்டரில் நடித்து வந்த ஷீலா என்பவர் நடிகை மட்டுமல்லாமல், பிரபல நடிகர் விக்ராந்தின் தாயார் என்பது பலருக்கும் தெரிய வந்துள்ளது. ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்த விஷயம் ஏற்கனவே பலருக்கும் தெரிந்திருந்தாலும் கூட, தற்போது இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

நடிகர் விக்ராந்தின் திருமணத்தின் புகைப்படங்களில் ஷீலாவை காணலாம். அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய்யின் நெருங்கிய சொந்தமான ஷீலா, தளபதி விஜய்க்கு சித்தி முறை ஆகிறார். விஜய் மற்றும் விஜய்யின் தாயார் பலரும் இந்த திருமணத்திற்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில், பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அவற்றுள் தொண்டன், கவண் உள்ளிட்ட திரைப்படங்கள் விக்ராந்துக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தன. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் விக்ராந்த்,

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் போட்டியில் பங்கேற்று வருகிறார். தளபதி விஜய் போலவே விக்ராந்தும் பேசி, நடந்து கொள்ளக் கூடிய தன்மையை சர்வைவர் நிகழ்ச்சியில் காணமுடிகிறது.

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

ஒரு பக்கம் அம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ட்ரெண்டாகி இருக்கிறார். இன்னொருபுறம் ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வைவர் போட்டியில் போட்டியாளராக மகன் விக்ராந்த் பங்கேற்றிருக்கிறார் என பலரும் தாய் மற்றும் மகன் இருவரையும் புகழ்ந்து வருகின்றனர்.

Also Read: “கடைசி வர உன்ன பாக்க முடியலயேம்மா”.. “கண்ணா”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா - கண்ணன்.. உருக்கமான interview!

தொடர்புடைய இணைப்புகள்

pandian Stores lakshmi is vikranths mother vijay relation

People looking for online information on Actor ZeeTamil, Kannan, Pandianstores vijaytelevision lakshmi, Saravanan Vikram, Sheela, Survivor VijayTelevision, Vikranth will find this news story useful.