''அய்யய்யோ ரூல்ஸ்படி இதெல்லாம் சொல்லக்கூடாதே'' - பிரபல நடிகை குற்றச்சாட்டு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 05, 2019 03:49 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்களன்று விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி, சாக்ஷி, ஷெரின் உள்ளிட்டோர் நுழைந்தனர்.

கவினுக்கு எதிராக சாக்ஷியுடன் வனிதாவும் ஷெரினும் கூட்டு சேர, மற்றொரு புறம் மோகன் வைத்தியா லாஸ்லியா பற்றி சேரனிடம் புகார் கூறினார். அப்போது பேசும் அவர், ''இங்கு வந்து உங்களிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு கவின், சாண்டியுடன் போய் அதனை சொல்லி சிரிக்கிறார்'' என்று குற்றம்சாட்டுகிறார். அதனை கேட்டு சேரன் கோபமாகிறார்.
இதுகுறித்து பிரபல நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டர் பக்கத்தில், ''அய்யய்யோ, மிஸ்டர். மோகன் வைத்தியா, ரூல்ஸ் படி இதெல்லாம் சொல்லக்கூடாதே என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மோகன் வைத்தியாவின் போட்டுக்கொடுக்கும் வேலையை ஆதரிக்காதீர்கள்'' என்று பதிலளித்துள்ளார்.
Aiyaiyo Mr.Mohan Vaithiya according to rules ithellam sollapdathey....
— sripriya (@sripriya) September 4, 2019