"சந்தியாவோட 3 மாச கெடு முடிஞ்சுது!".. மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்த ட்விஸ்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டி.வி.சீரியல்களில் முக்கியமான சீரியல் 'ராஜா ராணி பாகம் 2'.

ஆல்யா மானசா நடிப்பில் வெளியான முதல் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, 'ராஜா ராணி' சீரியலின் 'இரண்டாம் பாகம்' தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆல்யா மானசா மற்றும் சித்து ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில்தான், நடிகர் சித்து 'சரவணனாகவும்', ஆல்யா மானசா 'சந்தியாவாகவும்' - அதாவது 'கணவன், மனைவியாக' நடித்து வருகின்றனர். இதில் சரவணனின் தாயாரிடம், அதாவது தன்னுடைய மாமியாரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக நீண்ட நாட்களாகவே, சந்தியா தம்முடைய மாமியார் சிவகாமி வைத்த சில பரீட்சைகளை எதிர் கொண்டு வந்தார்.
இதனிடையே தற்போதுதான், இந்த குடும்பத்தில் உருவான நகை பிரச்சனைக்கு, சரவணனின் சகோதரர் செந்திலும், செந்திலின் மனைவி அர்ச்சனாவும் தான் காரணம் என்பதை சரவணன் ஆதாரத்துடன் நிரூபிக்க, குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது.
இதனால் சரவணனின் தாயார் செந்திலையும், அர்ச்சனாவையும் நன்றாக திட்டியதுடன், சந்தியாவை தவறாக நினைத்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த பிரச்சனைகளை கடந்து தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், சந்தியாவுக்கு அவருடைய மாமியார் சிவகாமி கொடுத்த மூன்று மாத காலக் கெடு முடிவடைந்த நிலையில் சந்தியாவை அழைத்து வர அவருடைய அண்ணன் வருகிறார்.
ஆனால் முடிவை, சந்தியாவின் மாமியார் சிவகாமி தான் சொல்ல வேண்டும் என்கிறார் சந்தியாவின் அண்ணன். அப்போது முடிவை தெரிவிக்கும் சிவகாமி, “சந்தியாவுக்கு வைக்கப்பட்ட பரீட்சையில் அவள் ஜெயித்து விட்டாள். இனி இந்த வீட்டில் இருப்பதும் இருக்காததும் அவளுடைய முடிவுதான்!” என்று கூறுகிறார். உடனடியாக முகத்தில் மகிழ்ச்சி மலர பேசும் சந்தியா, “இதுதான் என்னுடைய குடும்பம்.. நான் இங்கு தான் இருப்பேன்! நான் எங்கேயும் போகவில்லை!” என்று தெரிவிக்கிறார்.
Sooper மா சந்தியா! 👏
ராஜா ராணி - திங்கள் முதல் வெள்ளி இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajaRani #VijayTelevision pic.twitter.com/vKg4lM7von
— Vijay Television (@vijaytelevision) June 30, 2021
இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. பலரும் சந்தியா நீ ஜெயிச்சுட்டே மா!” என்று கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.