www.garudabazaar.com

"அய்யய்யோ இது செம்ம"... வெளியானது சூர்யா '40' மாஸ் அப்டேட்! போடு வெடிய!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"சூரரைப் போற்று" வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 40' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

surya starring 40th movie new update released

இவர்களுடன் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

surya starring 40th movie new update released

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில் அடுத்த அப்டேட் எப்போது என சூர்யா ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக சூர்யா '40' படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

surya starring 40th movie new update released

கொரோனா ஊரடங்கு முடிவடைந்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என ஏற்கனவே பாண்டிராஜ் அறிவித்திருந்த நிலையில் தற்போது, ஜூலை 12ஆம் தேதி   இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது. இதைத் தவிர வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' , கவுதம் மேனனின் வெப் சீரீஸ் ஆகியவை சூர்யாவின் கைவசத்தில் உள்ளன.

Tags : Surya, Pandiraj

தொடர்புடைய இணைப்புகள்

surya starring 40th movie new update released

People looking for online information on Pandiraj, Surya will find this news story useful.