டாட்டூ போட்டுக் கொள்வது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. காரணம் சுதந்திரத்தின் குறியீடாக அதைப் பார்க்கிறார்கள். நடிகர்கள் நடிகைகளுள் சிலர் டாட்டூ ரசிகர்கள் என்பது நமக்குத் தெரியும்.
படிப்பைத் தொடர்வதற்காக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த லட்சுமி மேனன் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்த அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவராத நிலையில் லட்சுமி மேனன் இம்முறை புதிய தோற்றத்தில் களம் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது. லட்சுமி மேனன் தான் நடிக்கும் படங்களில் குடும்பப் பாங்கான தோற்றத்துடன் நடித்து வந்தவர்.
தற்போது அவர் முதுகில் ஒரு டாட்டூவை குத்தியுள்ளார். அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களில் க்ளாமராக நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. முதுகில் குத்தப்பட்ட டாட்டூவுடனான லட்சுமி மேனனின் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது இன்ஸ்டா போஸ்டில் நடிகை டாப்ஸி கேம் ஓவர் படத்துக்காக தனது கையில் போடப்பட்ட டெம்ப்ரரி டாட்டூவைப் பற்றி சுவாரஸ்யமான பதிவொன்றை ஷேர் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, ‘# கேம்ஓவர் படத்தின் முதல் நாள் இந்த டாட்டூவை போட்டுக் கொண்டேன் அன்று கை எரிச்சலாக இருந்ததால் நிறைய டேக் ஆகிவிட்டது. நான் தனிப்பட்ட முறையில் டாட்டூக்களை விரும்புகிறேன், படங்களுக்காக பச்சை குத்திக்கொள்வதும் பிடிக்கும்தான். ஆனால் அவை தற்காலிகமாக இருப்பதால் அவற்றை பராமரிப்பது குறிப்பாக ஈரப்பதமான சென்னை வானிலையில் வலியாக மாறும். இந்த டாட்டூ உண்மையில் எனக்கு நகையைப் போல எனதாகவே மாறியது (படத்தில் ஸ்வப்னா எந்த நகையில் அணியவில்லை என்பதால்) அதனாலேயே பத்திரமாக பார்த்து கையாள வேண்டியதாகிவிட்டது’ என்றார்.
இந்த இரண்டு டாட்டூக்களில் உங்களுக்குப் பிடித்த டாட்டூ எது?