"வாலி படத்துக்கு கதை சொல்லிய நாட்கள்".. நடிகர் அஜித் தந்தை மறைவு.. SJ சூர்யாவின் உருக்கம்.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று காலை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
சோகம்
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 84, மறைந்த சுப்ரமணியம் அவர்களுக்கு அனில் குமார், அனுப் குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.
இரங்கல்
மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா, அருண் விஜய் ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது. பின்னர் உடலானது தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக நடிகர் அஜித் வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், ஏ. எல். விஜய், மகிழ் திருமேனி, லைகா தமிழ் குமரன், பார்த்திபன், நடிகர் பிரசன்னா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
SJ சூர்யா
இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான SJ சூர்யா அஜித் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள ட்விட்டர் பதிவில்,"RIP ஐயா, 'வாலி' கதை சொன்ன நாட்கள் இன்னும் நினைவில் இருக்கிறது, ஐயா அஜீத் சாருடன் அமர்ந்து என் கதையை ரசித்தார். ஆல்வேஸ் லவ் யூ ஐயா. அம்மா, அஜித் சார், ஷாலினி மேம் & குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
RIP iyaa …. I still remember the days of “Vaali” story narration, iyaa use to sit with Ajith sir , and enjoy my narration… always love you iyaa 🙏🙏🙏 deepest condolences to Amma , Ajith sir , Shalini mam & to the family 🙏sjs https://t.co/bZXxBc65Fc
— S J Suryah (@iam_SJSuryah) March 24, 2023
Also Read | நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு.. சிம்புவின் உருக்கமான இரங்கல் பதிவு..!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vignesh Shivan Condolences To Ajith Kumar Father Demise
- Actor Ajith Kumar At His Father Funeral Besant Nagar
- Actor Ajith Kumar Father PS Mani Funeral Video
- Ajith Kumar Brothers Statement Regarding Their Father Subramaniam Demise
- Udhayanidhi Stalin Pays Respect To Late Ajith Kumar Father
- Alphonse Puthren New Film With Ajith Kumar Movies Producer
- Ajith Kumar AK With His Son Advik In Dubai Football Ground
- Actor Ajith Kumar Shalini Family Dubai Vacation Video
- Bharadwaj Tweet About 25 Years Of Kadhal Mannan Ajith Kumar Saran
- Abhishek Bachchan Meet Shalini Ajith And Aadhvik Ajith Kumar
- Sj Suryah About Mark Anthony Movie Shooting Accident Vishal
- Vishal SJ Suryah Mark Anthony Movie Shooting Spot Accident
தொடர்புடைய இணைப்புகள்
- காசு பணத்தை விட Family தான் முக்கியம்🔥 Busy-யான Life-லயும் குடும்பத்தோடு Time Spent செய்யும் AK😍
- AJITH SIR சொன்ன அந்த வார்த்தை 🤩|என்னோட அடுத்த DIRECTOR😱 #ajithkumar #sjsurya #behindwoodsash
- AJITH SIR வாங்கி குடுத்த CAR தான் 😱😍|மேடையில் SJ SURYA சொன்ன அந்த வார்த்தை 🤩#behindwoods
- வெளிநாட்டில் குடும்பத்துடன் THALA அஜித்.. இணையத்தில் VIRAL ஆகும் புகைப்படம். | AJITH KUMAR
- ரெய்டர்களின் 'ரூட்டு தல'😍 BMW-ல் இந்தியாவை அலச போகும் AK🔥 96 RAM போல மீண்டும் பயணம்
- "100 கோடி சம்பளம் வாங்கி என்ன பண்ணுவாங்க?" 🙄 Sunaina ROFL Interview
- "സൂര്യ മേയ് മാസം Shooting-ന് പോകില്ല "❤️😍| Jyotika Reveals
- SORRY மா, LATE ஆகிடுச்சு 🙏 அவசர அவசரமா சென்ற AJITH | AK 62
- Shalini மேடம், ஒரு Selfie 🤳 மகள் Anoushka உடன் படம் பார்க்க வந்த Shalini Ajith | AK 62
- 🔴AK 62-ல AMIR😲 Ajith Sir கிட்ட கேட்ட உடனே🔥 தல வீட்டுக்கு Amir-Pavni செய்த Special Romantic Biryani😍
- "வாலி படம் பண்றப்போ Ajith Sir பண்ணத மறக்கவே முடியாது"🤩 SJ Suryah Shares His Memories With AK💥
- "நம்மள கையில வெச்சுருந்த அம்மாவ இப்போ நான் கையில வெச்சுருக்கேன்"😇 Emotional ஆன SJ Suryah🥹