“இந்த சிஸ்டத்தை மாத்த ‘ஹீரோ’ வேணும்..!” - சிவகார்த்திகேயனின் பட டீசரை வெளியிட்ட சல்மான் கான்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 24, 2019 11:20 AM
‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து முகமுடி அணிந்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஹீரோ பட செகண்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது.
இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் ‘ஹீரோ’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். சுமார் 1.32 நிமிடங்கள் கொண்டுள்ள இந்த டீசரில் கல்வியை சுற்றி நடக்கும் ஊழலை ஹீரோவாக வரும் சிவகார்த்திகேயன் எப்படி தடுக்கிறார் என்பதை விறுவிறுப்பாக கூறியுள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.
“இந்த சிஸ்டத்தை மாத்த ‘ஹீரோ’ வேணும்..!” - சிவகார்த்திகேயனின் பட டீசரை வெளியிட்ட சல்மான் கான் வீடியோ