சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தில் இருந்து வெளியான Deleted Scene வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 19, 2019 06:58 PM
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை (டிசம்பர் 20) வெளியாகவிருக்கிற படம் 'ஹீரோ'. இந்த படத்தை 'இரும்புத்திரை' பட புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து டெலிட்டட் சீன் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உரையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தில் இருந்து வெளியான DELETED SCENE வீடியோ வீடியோ
Tags : Sivakarthikeyan, Hero, Yuvan Shankar Raja, P S Mithran