சிவகார்த்திகேயன் பட காமெடிக்கு ஹர்பஜன் ரியாக்ஷன் - அத மட்டும் சதீஷ் எடிட் பண்ணிட்டாராம்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சதீஷ் தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து 'அண்ணாத்த', ஆர்யாவுடன் இணைந்து 'டெடி', ஹர்பஜன், லாஸ்லியாவுடன் இணைந்து 'ஃபிரெண்ட்ஷிப்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'எதிர் நீச்சல்' பட காமெடி காட்சியில் சிவகார்த்திகேயன் சதீஷிடம், 'சிரிச்சா ஸ்ரீசாந்த மாதிரி இருப்ப என சொல்ல, அதற்கு சதீஷ் அறஞ்சா ஹர்பஜன் மாதிரி இருப்பேன் பரவா இல்லயைா'' என்பார்.
இந்த காமெடி காட்சியை பார்க்கும் ஹர்பஜன் சிங் மற்றும் சதீஷ் இணைந்து பார்க்கின்றனர். முதலில் சதீஷை முறைக்கும் ஹர்பஜன் சிங், பின்னர் சிரித்தபடி அவரை பாராட்டுகிறார். இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர், 'சப்புனு ஒன்னு வச்சுருவாரோனு நினச்சுட்டேன்பா' என்று கமெண்ட் செய்ய, அதற்கு பதிலளித்த சதீஷ், 'அத மட்டும் எடிட் பண்ணிட்டேன் புரோ' என்று நக்கலாக தெரிவித்துள்ளார்.
Great time with our #தமிழ்ப்புலவர் @harbhajan_singh bro in #FriendShip Shooting spot 😍😍😍 @Siva_Kartikeyan @ChennaiIPL pic.twitter.com/Uwo1JHc1C9
— Sathish (@actorsathish) March 8, 2020