அட குட்டி சினேகா... செம கியூட் - மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட சினேகா
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இத்தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடிகர் பிரசன்னா Behindwoods-க்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பெண்கள் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.