ஐஸ்வர்யா மேனனை அசரடித்த அழகி இவள்..! - நடிகர் சதீஷ் வீடியோவுக்கு செம ரெஸ்பான்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

நடிகர் சதீஷ் வெளியிட்ட செம வீடியோ | actor sathish shares a video and iswarya menon comments

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருபவர் சதீஷ். எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் தனது காமெடியால் கலக்கினார். மேலும் தமிழ்ப்படம் 2-வில் பல கெட்டப் போட்டு காமெடியில் அசத்திய இவர், தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். தமிழ்ப்படம்-2 விற்காக அவர் பெண் வேடமிட்டு நடித்தார். அப்போது கேரவனுக்கு செல்லும் போது எடுத்த வீடியோவ அவர் ட்விட்டரில் பகிர்ந்தார். அதற்கு அப்படத்தின் நாயகி ஐஸ்வர்யா மேனன், ''ஹாய் ப்யூட்டி'' என கமன்ட் அடித்துள்ளார். மேலும் இயக்குநர் சி.எஸ்.அமுதன், ''சார், இதே மாதிரி உங்க எல்லா கேரவன் ஆக்டிவிட்டீஸ் வீடியோவையும் போடுங்க'' என கமன்ட் அடித்துள்ளார். 

 

Entertainment sub editor