சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்சன்ஸ் படம் மீண்டும் தொடங்கப்படுகிறதா? - Producer அதிரடி தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்'ஹீரோ' படத்துக்கு பிறகு, சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'டாக்டர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'கேங் லீடர்' படத்தில் நடித்திருந்த பிரியங்கா மோகன் நடிக்க, வினய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் செப்டம்பர் மாத வெளியிடாக திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த சயின்ஸ் ஃபிக்சன் படத்தின் ஷூட்டிங் தாமதமானது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு எங்களது புரொடக்ஷன் நம்பர் 5, இரண்டு கட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் சில நாட்களில் அறிவிக்கப்படும். என்று குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து இந்த பட இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்த ஆண்டாவது சிறப்பானதாக அமையுமென்று வேட்கையோடு படப்பிடிப்பில்... நன்றி சிவகார்த்திகேயன் சகோதரர்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த ஆண்டு மிக சிறப்பானதாக அமையுமென்ற வேட்கையோடு படப்பிடிப்பில்... நன்றி பிரதர் @Siva_Kartikeyan 🙏🏼 https://t.co/rn1gEckzw2
— Ravikumar R (@Ravikumar_Dir) January 28, 2020