கும்முரு டப்பரு கேட்க தவழ்ந்து வரும் க்யூட் பாப்பா..! சிவகார்த்திகேயன் ஸ்வீட் ரிப்ளை.
முகப்பு > சினிமா செய்திகள்சிவகார்த்திகேயனின் பாடலை கேட்க தவழ்ந்து வரும் குழந்தையின் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தற்போது அயலான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தில் குழந்தைகளுக்கென தனி இடம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வந்த கும்முரு டப்பரு பாடல் ஒலித்தவுடன், ஒரு குழந்தை தவழ்ந்து வரும் வீடியோ ட்ரென்ட் ஆனது. இதை பார்த்த சிவகார்த்திகேயன், ''ஆஹா.. என்ன ஸ்பீடு, சூப்பர் க்யூட் நிவி பாப்பா' என பாராட்டியுள்ளார். இதையடுத்து இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.
Aaha enna speeduuuu 👏👏👍😊 Super cute #Nivi papa 🤗🤗 https://t.co/i64aqoQ4N4
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 6, 2020