www.garudabazaar.com

"கொல மாஸ்!"... அனிருத் இசையில்.. ‘நாய் சேகர்’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சதீஷ் நடிக்கும் படத்துக்கு பெயர் நாய் சேகர் என்று தலைப்பிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan releases Naai Sekar first look starring Sathish

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நடிகர் சதீஷ் நடிக்கும் நாய் சேகர் என தலைப்பிடப்பட்ட படத்தில் நடிக்கிறார். அனிருத் இசையில் சிங்கிள் உருவாகும் இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருக்கிறார்.

நடிகர் சதீஷின் நெருங்கிய நண்பரும், சதீஷ் நடித்த பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவருமான சிவகார்த்திகேயன், சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’-ன் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், “வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சதீஷ், உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள், படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்” என்று பகிர்ந்து இருக்கிறார்.

இதனிடையே இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி, திரைப்பட விவகாரம் தொடர்பாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் சுராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப் படத்துக்கு நாய் சேகர் என தலைப்பிட போவதாக அப்படக்குழுவினர் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: "என்ன?.. பிக்பாஸ் 5ல் இந்த குக் வித் கோமாளி பிரபலமா?" .. இது மட்டும் நடந்தா சரவெடி தான்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan releases Naai Sekar first look starring Sathish

People looking for online information on AGS Entertainment, Sathish, Sivakarthikeyan will find this news story useful.