www.garudabazaar.com

அடடே.. நம்ம சிவகார்த்திகேயன்.. யார் வீட்டு விசேஷத்துக்கு வந்துருக்காரு பாருங்க.. Viral ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவர்கார்த்திகேயன் ரவிகுமாரின் இயக்கத்தில் 'அயலான்',  நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் 'டாக்டர்' ஆகிய படங்களை தொடர்ந்து, அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் 'டான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan attended Anbumani ramadoss daughter marriage

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸின் இல்லத் திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

முன்னாள் எம்பியும் பாமகவின் முன்னணி முதல்வர் வேட்பாளருமான டாக்டர். அன்புமணி ராமதாஸின் மகளுக்கு நடந்த திருமண விழாவில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

டான் திரைப்படத்தை பொறுத்தவரை, லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கும் இந்த படத்துக்கு, அனிருத் இசையமைக்க, 'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இவர்களுடன் SJ சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Also Read: “அண்ணே நல்லாருக்கீங்களா?”.. விஐபி போல் நுழைந்து... சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடிய ஆசாமி.. பரபரப்பு பின்னணி!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan attended Anbumani ramadoss daughter marriage

People looking for online information on Sivakarthikeyan, Sj suryah will find this news story useful.