www.garudabazaar.com

BREAKING: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கப்போகும் S.J சூர்யா பட இயக்குனர்? யார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) கடைசியாக தெலுங்கில் நானியுடன் டக் ஜெகதீஷ் (Tuck Jagadish) படத்தில் நடித்திருந்தார்.

aishwarya rajesh next film with sj suriyah movie director

இந்தப்படம் அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடியில் செப்டம்பர் 10 அன்று வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக், நடிகர் அர்ஜூனுடன் ஒரு படம் என பிஸியாக வலம் வருகிறார்.அதேபோல தெலுங்கில் ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கான பீம்லா நாயக் (Bheemla Nayak) படத்தில் நடித்து வருகிறார். 

aishwarya rajesh next film with sj suriyah movie director

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் உடன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் முன்பு சூர்யாவை (Suriya) வைத்து NGK படத்தையும், கார்த்தியை (Karthi) வைத்து சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் படங்களையும் தயாரித்துள்ளது.

aishwarya rajesh next film with sj suriyah movie director

இந்த படத்தை எஸ் ஜே சூர்யாவை வைத்து 2019ல் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற மான்ஸ்டர் (Monster) படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மான்ஸ்டர் படத்தை இதே ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. 

aishwarya rajesh next film with sj suriyah movie director

People looking for online information on Aishwarya Rajesh will find this news story useful.