சிவகார்த்திகேயன் வெளியிட்ட சிபி, சமுத்திரக்கனி, நட்டி காம்போவின் 'வால்டர்' டிரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சத்யராஜ் போலீஸாக நடித்து கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'வால்டர் வெற்றிவேல்'. இந்நிலையில் அவரது மகன் சிபி சத்யராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் 'வால்டர்'. இந்த படத்தில் அவருடன் சமுத்திரக்கனி, நட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட சிபி சத்யராஜின் வால்டர் டிரெய்லர் இதோ | Sivakarthikeyan released Sibi Sathyaraj and Natty's walter Trailer

இந்த படத்தில் சிபி சத்யராஜூக்கு ஜோடியாக ஷ்ரின் காஞ்வாலா நடிக்க, சார்லி, ரித்விகா,அனி சேட்டா, முனிஷ்காந்த், பவா செல்லத்துரை சனம் ஷெட்டி உள்ளிட்டோர் குறிப்பிட்டதக்க வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை U.அன்பு எழுதி, இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு  தர்மா பிரகாஷ் இசையமைக்க, ரசமதி  ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை  11:11 புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட சிபி, சமுத்திரக்கனி, நட்டி காம்போவின் 'வால்டர்' டிரெய்லர் இதோ வீடியோ

Entertainment sub editor