சிவகார்த்திகேயன் "நம்ம வீட்டு பிள்ளை" எப்படி இருக்கு? மக்கள் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 27, 2019 12:24 PM
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது முதல் காட்சி முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து வருவதால் இந்த படம் ஹிட் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பாண்டியராஜனின் உருக்கமான வசனங்கள் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றும் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துள்ளதாகவும், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இந்த படத்தின் ப்ளஸ் அம்சமாக இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
முதல் பாதி முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியின் காமெடியால் படம் நகர்கிறது என்றும் இரண்டாம் பாதியில் தங்கை சென்டிமென்ட் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் பார்வையாளர்களை இயக்குனர் பாண்டிராஜ் நெகிழ வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சிவகார்த்திகேயன் "நம்ம வீட்டு பிள்ளை" எப்படி இருக்கு? மக்கள் கருத்து வீடியோ