www.garudabazaar.com

மெகாஸ்டார் மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் கேங்க்ஸ்டர் படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மெகாஸ்டார் மம்முட்டி நேற்று தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

upcoming film Bheeshma Parvam have released a new poster

இதனை முன்னிட்டு மம்முட்டி நடிக்கும் பீஷ்ம பர்வம் படத்தின் படக்குழு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் போஸ்டரை சமூக ஊடகங்களில் மம்முட்டி பிறந்தநாள் சிறப்பாக வெளியிட்டு வாழ்த்துகள் தெரிவித்தனர். பீஷ்ம பர்வம் படத்தின்  இரண்டாவது போஸ்டரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அமல் நீரத் தன்னுடைய முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை அமல் நீரத் தனது சொந்த அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் கீழ் இந்த படத்தை  தயாரிக்கிறார்.

upcoming film Bheeshma Parvam have released a new poster

பீஷ்ம பர்வம் படத்தின் படக்குழு மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், மம்முட்டி ரசிகர்கள் போஸ்டர் அப்டேட்டை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

upcoming film Bheeshma Parvam have released a new poster

தேவதாத் ஷாஜி, அமல் நீரத் ஆகியோருடன் இணைந்து எழுதிய பீஷ்ம பர்வம் கேங்க்ஸ்டர் டிராமா வகைமையில் இந்தப்படம் உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சவுபின் ஷாஹிர், நதியா மொயுடு, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, ஃபர்ஹான் ஃபாசில், வீணா நந்தகுமார்,  அனசூயா, மாலா பார்வதி மற்றும் லீனா ஆகியோர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கின்றனர். பிரேமம் பட ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

upcoming film Bheeshma Parvam have released a new poster

People looking for online information on Anend C Chandran, Mammootty will find this news story useful.