www.garudabazaar.com

அருண் விஜய் - ஹரி இணையும் #AV33 படத்தின் First Look போஸ்டர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது மாமாவான இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

av 33 arun vijay hari movie update on first look

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

av 33 arun vijay hari movie update on first look

இப்போது 'ஏ.வி 33' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், காரைக்குடி, பழனி பகுதிகளில் நடந்தது. தற்போது  இப்படத்தின்  இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

av 33 arun vijay hari movie update on first look

இந்நிலையில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படத்தின் முதல்லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. 

av 33 arun vijay hari movie update on first look

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:

இசை: GV. பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: கோபிநாத்

எடிட்டிங்: ஆண்டனி

ஸ்டண்ட்: அனல் அரசு

கலை: மைக்கேல்

மக்கள் தொடர்பு : ஜான்சன்

இணை தயாரிப்பு: G.அருண்குமார்

தயாரிப்பு: டிரம்ஸ்டிக்ஸ்    புரொடக்‌ஷன்ஸ் Drumstick Productions எஸ்.சக்திவேல் .

av 33 arun vijay hari movie update on first look

People looking for online information on Arun Vijay, Hari will find this news story useful.