"என்னப்பா சத்தம்?என்னது ‘ஹீரோ’ Single வேணுமா?அட..!" - அறிவிப்பு அலர்ட் செய்த தயாரிப்பு நிறுவனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு பற்றி தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Sivakarthikeyan Hero first single announcement on today

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லது செய்ய முகமூடி அணிந்து வரும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

இது தொடர்பாக கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ‘என்னப்பா சத்தம்? என்னது, #HeroSingle வேணுமா? அட! செரி... 5 மணிக்கு ஒரு announcement ஓட வரோம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் சிங்கிள் டிராக் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.